#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஊற வைத்த பாதாமை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்ததா.! இது தெரியாம போச்சே...
ஒரு சிலர் தினமும் இரவில் பாதாமை ஊற வைத்து பின் காலை எழுந்தது வெறும் வயிற்றில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி ஊற வைத்த பாதாமை தினமும் உட் கொள்வது சிறந்ததா, உடல் ஆரோக்கியம் பெறுகிறதா என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
1. குறிப்பாக வயதான காலத்தில் செரிமான பிரச்சனைகள் மற்றும் பல் பிரச்சனைகள் அதிகரிக்கும் எனவே தினமும் ஊற வைத்த பாதாமை சாப்பிடுவதால் மென்மையாகவும் ஜீரணிக்க எளிதாகவும் உதவுகிறது.
2. பாதாமை ஊறவைக்கும் போது, அது லிபேஸ் போன்ற சில நொதிகளை வெளியிடுகிறது. இது நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.
3. பாதாம் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வளமான மூலமாகும். அவற்றை ஊறவைக்கும் போது, நன்மைகள் பெருகும்.எனவே தினமும் ஊற வைத்த பாதாமை உண்ணும்போது ஆக்ஸிஜனேற்ற மற்றும் நார்ச்சத்து நன்மைகள் மேம்படும்.
4. ஊறவைக்கும் செயல்முறை சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடிய அசுத்தங்களையும் நீக்குகிறது. மேலும் ஆரோக்கியமான இதயத்திற்கு தினமும் நான்கு ஊற வைத்த பாதாமை சாப்பிடுவது நன்று.