"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
மழைக்கு இதமாக சூடான, சுவையான மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ்.. டக்குனு செய்யலாம்.. ரெசிபி இதோ..!
நம்மில் பலருக்கு உருளைக்கிழங்கு பொரியல், கிரேவி என்றால் மிகவும் பிடிக்கும். அதே சுவையில் மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையானப் பொருட்கள் :
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுந்து - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10 ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 2 ( குறுக்கே நறுக்கியது )
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பல்
இஞ்சி விழுது - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் பொடி - 1/4 தேக்கரண்டி
மரவள்ளிக்கிழங்கு - 1 கப் ( நறுக்கியது )
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 கொத்து
செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து குக்கரை வைக்கவும். அதில் 1 கப் மரவள்ளிக்கிழங்கு, சிறிது உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க.. புத்திசாலியாக மாற இதை செய்யுங்கள்.!
பின்பு, ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் மேலே கொடுக்கப்பட்ட அளவுகளின் படி கடுகு, வெள்ளை உளுந்து, கடலை பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம், தட்டிய பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். பின்பு, அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் பொடி 1/4 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும். பின்பு, அதில் வேக வைத்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இறுதியாக 2 தேக்கரண்டி தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் தயார்.
இதையும் படிங்க: குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்தால்.. எதிர்காலமே பாழாகிடும்.. உஷார்.. பெற்றோர்களே.!