35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
உடல் எடையை குறைக்க இதை செய்தால் உயிருக்கு ஆபத்து? வெளியான அதிர்ச்சி தகவல்!
உடல் எடையை குறைக்க பலர் சாப்பிடாமல் இருப்பது போன்ற உணவு முறைகளை பின்பற்றினால் இதய நோய்களுக்கான ஆபத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க மருத்துவ ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் துரித உணவு கலாச்சாரம் மாறி வருவதால் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சினை பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனையடுத்து உடல் எடையை குறைக்க பலரும் பல வகையான முறைகளை பின்பற்றி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இருக்கும் முறைகளை பின்பற்றி வருகின்றனர். அதன்படி பல்வேறு நாடுகளில் டயட் எனப்படும் சாப்பிடாமல் இருக்கும் உணவு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 16 மணி நேரத்தை சாப்பிடாமல் பட்டினியாக இருந்து, 8 மணி நேரத்திற்கு மட்டுமே தினசரி சாப்பிடுகின்றனர். இந்த வகை டயட் உணவு முறையால் உடல் எடை குறைவதாக பலரும் கூறுவதால் இந்த பழக்கத்தை பலரும் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் டயட் உணவு முறை குறித்து ஆய்வு செய்த தீ அமெரிக்கன் இதய கூட்டமைப்பு அதிர்ச்சிதரும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டயட் உணவு முறை மேற்கொள்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 90% வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.