இனி அந்த கவலையே வேண்டாம்! வாட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது புதிய வசதி



fingerprint option will be released in whatsapp

வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்களை பாதுகாக்க இதுவரை இல்லாத புதிய பாதுகாப்பு வசதியை வாட்ஸப் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன்மூலம் பயனாளர்கள் தங்களது கைரேகை மூலம் வாட்ஸப்பினை லாக் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

தற்போது வெளியாகும் அனைத்து மொபைல் போன்களிலும் கைரேகை கொண்டு லாக் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை கொண்டு பிரத்தியேகமாக வாட்ஸப்பினை இயக்கவும் முடிவு செய்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

Whatsapp

இதற்கான வேலைகளை வாட்சப்  நிறுவனம் ஏற்கனவே துவங்கிவிட்டது. பெரும்பாலும் அடுத்து வரும் புதிய அப்டேட்டில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாட்ஸ் அப் பயனாளர்கள் தங்களது கைரேகை மூலம் மட்டுமே வாட்ஸ் அப்பை திறக்கும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் நமது அனுமதி இல்லாமல் மற்றவர்கள் வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்களை படிக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இதற்கான வசதியை வாட்ஸப்பில் Settings > Account > Privacy என்ற இடத்தில் பார்க்க முடியும். இந்த வசதி தற்பொழுது கட்டாயமாக பயன்படுத்த வேண்டுமென்பது இல்லை. தேவைப்பட்டால் மட்டும் இதனை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகிறது. இதனை கொண்டு தனி நபர் உரையாடல்களை லாக் செய்ய முடியாது.