பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தாய்மாமாவால் இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்! சின்மயிக்கு இளம்பெண் உருக்கமான கடிதம்
#MeToo அமைப்பின் மூலம் திரைத்துறை, அரசியல், விளையாட்டு என பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் முகத்திரைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து அதிகமாக பகிர்ந்த சின்மயி தற்போது பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் இன்று சின்மயி, அவருக்கு ஒரு இளம்பெண் அனுப்பிய பாலியல் புகார் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தன் சொந்த தாய் மாமனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அதனை தற்போது பகிர்ந்துள்ள சின்மயி இந்த சாதாரண பெண்ணிற்கு நேர்ந்துள்ள கொடுமைக்கு என பதில் கூற போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த பதிவில் இளம்பெண் கூறியிருப்பதாவது, "சின்மயி, நீங்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். எனக்கும், என் வீட்டில் அதேபோல் பிரச்னை உள்ளது. என் தாய் மாமா எனக்கு இதை செய்தார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். என் பெற்றோரும் அவரை பலமுறை கண்டித்துள்ளார்.
அவரை பற்றி எங்கள் வீட்டில் பேசும்போதெல்லாம் எனக்கு கோவம் வருகிறது. அவரை பற்றி பேச வேண்டாம் என்று வீட்டில் கூறினால், "என் திருமணத்திற்கு பிறகு உன் மாமா தான் நமக்கு இடம் கொடுத்து உதவினார். அவரை பற்றி தவறாக பேசாதே" என்று என் அம்மா என்னை தான் திட்டுகிறார். என் அம்மாவே அவருக்காக பேசும் போதெல்லாம் எனக்கு அழுகையாய் வருகிறது. சமீபத்தில் எங்கள் வீட்டில் நடந்த விழாவிற்கு என் மாமாவை அழைக்க வேண்டாம் என் அம்மாவிடம் கூறினேன். அனால் அம்மா என்னை பற்றி கவலைப்படாமல், "என் தம்பியை கூப்பிடாமல் இருந்தால், அவனுடைய கௌரவம் என்ன ஆகும்" என கூறி அவரை அந்த விழாவிற்கு அழைத்தார்.
என் அம்மாவிற்கு கூட தம்பியின் கௌரவம் தான் பெரிதாகிவிட்டது; என்னை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. மேலும் நன் ஒரு பையனை காதலிப்பதாக வீட்டில் கூறிவிட்டேன். என் மாமா எனக்கு செய்த துரோகத்தால், எங்கள் சாதியை சேர்ந்த யாரையும் திருமணம் செய்துகொள்ள எனக்கு மனம் வரவில்லை. இங்கு யாரும் என்னுடைய வேதனையை புரிந்து கொள்ளவதாயில்லை. அவர்களுக்கு அவர்கள் கௌரவம் தான் பெரிதாக தெரிகிறது.
அவர்களை எதிர்த்து நன் எதை பேசினாலும் எனக்கு தான் தண்டனை கிடைக்கிறது. என் தந்தையும் இதை பற்றி எதையும் கண்டுகொள்ளவதில்லை. என்னால் இங்கு எதையும் செய்ய முடியவில்லை. நரகத்தில் வாழ்வது போல் இருக்கிறது. எனக்கு நீங்கள் தான் எதாவது வழி சொல்ல வேண்டும்" என உருக்கமாக அந்த பெண் சின்மயிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பாப்போம்.
A MeToo story from a normal household. What do we do with a social structure like this? pic.twitter.com/JrgjT1BiK7
— Chinmayi Sripaada (@Chinmayi) December 19, 2018