காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?



Health benefits of soaked almonds

தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கிறது. எனவே, காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து எந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் பி6, தயமின், நியாசின், ஃபோலேட், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செம்பு இரும்பு சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது.

Soaked almonds

ஊறவைத்த பாதாமில் உள்ள நார் சத்து மற்றும் புரதம் பசி ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவது நல்ல பலன் கொடுக்கிறது.

பாதாமில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

Soaked almonds

உரு வைத்த பாதாமில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பி6 மூளை செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. அதேபோல் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.