வாய்துர்நாற்ற பிரச்சனைக்கு 2 நிமிடத்தில் உடனடி தீர்வு.. வெறும் 'டீ'யே போதும்.!



How to avoid mouth smell problem

வாய் துர்நாற்ற பிரச்சனை பலருக்கு பெரும் சங்கடங்களை பல இடங்களில் ஏற்படுத்திவிடும். இது கேட்பவர் மற்றும் பேசுபவர் இருவருக்குமே சங்கடம் தரும் விஷயமாகும். மிக நெருக்கமாக பழகும் நபர்கள் கூட," உங்கள் வாயில் துர்நாற்றம் வருகிறது" என்று சொல்ல தயங்குவார்கள். 

இந்த பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இதற்கான தீர்வுகள் குறித்து பார்க்கலாம். 

Mouth smell problem

வாய் வறண்டு போனால் பாக்டீரியா உருவாகி அதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும். வாய் வறண்டு போக முக்கிய காரணம் புகை மது பழக்கம், நீண்ட நேரம் பேசுவது உள்ளிட்டவை.
வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற வற்றில் சல்பர் உள்ளது. மேலும், சல்பர் அதிகம் உள்ள உணவுகளையோ அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்தாலும் பாக்டீரியாக்கள் அதிகமாக உருவாவதால் வாயில் துர்நாற்றம் ஏற்படும்.  போன்ற உணவு வகைகளில் மணமுள்ள சல்ஃபர் உள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்தினாலோ அல்லது டீ காபி போன்ற பானங்கள் பருகினாலோ வாயில் பாக்டீரியா ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் உருவாகும். நமது தோலில் இருக்கும் இறந்த செல்களை உடல் தானாகவே வெளியேற்றும். ஆனால் பற்களால் அதை இயலாது. எனவே அன்றாடம் இரு முறை பற்களை சுத்தம் செய்வதால் இந்த பிரச்சனை தீர்வுக்கு வரும். அதிகப்படியான நபர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.

Mouth smell problem

புற்றுநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், சர்க்கரை நோய், நுரையீரல் நோய் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு வாய் விரைவில் வறண்டு போகும். இவர்களுக்கும் வாய் துர்நாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. வாய் வறண்டு போகாமல் இருக்க அதிக தண்ணீர் குடிப்பது நல்லது.  

கிரீன் டீ மற்றும் பிளாக் டீ போன்றவற்றை கொண்டு வாய் கொப்பளிக்கும் போது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும் எனவும் இதன் மூலம் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம் என்றும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. மிளகு கீரையை எண்ணெயில் ஊற வைத்து அதன் மூலம் வாய் கொப்பளிப்பது வாய் துர்நாற்றத்தை நீக்கும்.