குழந்தைகள் கூட சாப்பிடுவாங்க.! கசப்பில்லாத பாகற்காய் குழம்பு.!



How to make bitter gourd broth

பாகற்காய் குழம்பு இப்படி செய்து பாருங்கள் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

புளி - எலுமிச்சை அளவு

 குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

தனியா பொடி - 1 டீஸ்பூன்

தக்காளி - 2

கருவேப்பிலை - 1 கொத்து

வெங்காயம் - 1

பூண்டு - 4

மிளகு - ¼ டீஸ்பூன்

சீரகம் - ½ டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்

வெந்தயம் - ½ டீஸ்பூன்

கடுகு - ½ டீஸ்பூன்

பாகற்காய் - 300 கிராம்

நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

Pagarkaai Kuzhambuசெய்முறை : 

ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, நறுக்கிய பாகற்காயை அதில் போட்டு, நன்றாக சிவக்கும் வரையில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர், அதே எண்ணெயில் உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளவும். அதனைத் தொடர்ந்து, வெங்காயம், கருவேப்பிலை போன்றவற்றை அதில் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். தக்காளியையம்  அதில் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

தக்காளியை நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வதக்கிக் கொள்ளவும். பிறகு எல்லா பொடிகளையும் நன்றாக சேர்த்துக் கொள்ளவும். அடுத்தபடியாக புளி கரைசல் தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் உப்பை சேர்த்து சுவையை பரிசோதித்து பாருங்கள்.

Pagarkaai Kuzhambu

பின்னர் ஒரு பாத்திரத்தைக் கொண்டு மூடி, 2 நிமிடங்கள் வரையில் அதை  நன்றாக கொதிக்க விடுங்கள். அதன் பிறகு பாகற்காய்களை சேர்த்து, கிளறி விடுங்கள். இப்போது மறுபடியும் அதனை ஒரு பாத்திரத்தைக் கொண்டு மூடி நன்றாக பதம்  வரும் வரையில் கொதிக்க வையுங்கள். பின்னர் குழம்பின் பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லியை தூவினால் பாகற்காய் குழம்பு தயாராகிவிடும்.