#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பூண்டு சட்னி.. 10 நிமிடத்தில் வீட்டிலேயே செய்வது எப்படி?..!
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பூண்டு சட்னி எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
பூண்டு உடம்புக்கு மிகவும் நல்லது. இதனை குழம்பில் போட்டு சாப்பிட்டாலும், பொரியல், சட்னி செய்து சாப்பிட்டால் கூட ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
தேவையான பொருட்கள் :
பூண்டு பல் - 100 கிராம் நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
வர மிளகாய் - 10
கல் உப்பு - தேவைக்கேற்ப
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
கடுகு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை :
★முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, வரமிளகாய் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
★பின் அதே எண்ணெயில் 100 கிராம் பூண்டு பல்லை மூன்று நிமிடம் போல் நன்றாக வதக்கி, தோல் சுருங்கி நிறம் மாறி வந்ததும் தனியாக எடுத்து ஆற வைக்க வேண்டும்.
★அடுத்து வறுத்த வரமிளகாய் மற்றும் பூண்டை மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு புளி சேர்த்து, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும்.
★இறுதியாக அரைத்த சட்னியை கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்தால் பூண்டு சட்னி தயாராகிவிடும்.