வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
ரவையில் எப்போதும் உப்புமா செய்து போர் அடித்துவிட்டதா?. இனிப்பான ரவா லட்டு செய்து அசத்துங்க..!!
வீட்டிலேயே இனிப்பான சுவையான ரவா லட்டு எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
செய்ய தேவையான பொருட்கள் :
பால் - 250 மில்லி லிட்டர்
தேங்காய் - ஒன்று
ரவை - அரை கிலோ
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
சர்க்கரை - அரை கிலோ
நெய் - ஆறு ஸ்பூன்
ஏலக்காய் - சிறிதளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட முந்திரி பருப்பை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நெயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
★பின் தேங்காய் துருவி, ஏலக்காயை பொடித்து எடுக்க வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் பாலை நன்கு காய்ச்ச வேண்டும்.
★வானலியில் நெய் விட்டு, ரவையை பொன்னிறமாக வறுக்கவும். அடுத்தபடியாக சர்க்கரையை அதனோடு சேர்த்து கிளறி, ரவையை சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும்.
★பின்னர் விடாமல் கிண்டி ஏலக்காய் தோலை சேர்த்து கிளறி, இறுதியாக 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பை சேர்த்து லட்டு பதத்தில் பிடித்தால் ரவா லட்டு தயார்.