ஆஸ்துமா, நெஞ்சுசளியை குணப்படுத்தும் தூதுவளை சூப்.. 5 நிமிடத்தில் வீட்டிலேயே செய்வது எப்படி?.!



How to Prepare Thoothuvalai Soup Tamil

இருமல், நெஞ்சுசளி மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் தூதுவளை சூப் எப்படி செய்வது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

தூதுவளைக் கீரையை வதக்கி, துவையலாக செய்து சாப்பிடுவதன் மூலம் நெஞ்சுசளி மற்றும் இருமல் போன்றவை நீங்கும். அத்துடன் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் தூதுவளையை தினமும் உண்ண வேண்டும். 

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி 
சின்ன வெங்காயம் - 10 
துளசி இலை - சிறிதளவு 
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப 
உப்பு - தேவைக்கேற்ப 
கருவேப்பிலை - 1 கைப்பிடி 
கொத்தமல்லி - 1 கைப்பிடி
புதினா -1 கைப்பிடி
தோல் சீவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 
தூதுவளை இலை - 10

cooking tips

செய்முறை :

★முதலில் சின்ன வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

★பின் ஒரு வாணலியில் தூதுவளை இலை, இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, புதினா, துளசி இலை, வெங்காயம் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். 

★இறுதியாக இறக்கி வடிகட்டி மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறினால் தூதுவளை சூப் தயாராகிவிடும்.