தெரு நாய்களிடம் இருந்து உங்களை தற்காத்து கொள்வது எப்படி?!



How to prevent street dog

தெருநாய்கள் பெரும்பாலும் நட்பானவை தான் என்றாலும், அவை மனிதர்களைத் தாக்கும் சில அரிதான சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன. நாம் நாய்களை கருணையோடு நடத்த வேண்டியது அவசியமென்றாலும் கூட, நமது பாதுகாப்பையும் உறுதிப் படுத்த வேண்டும்.

Prevent

நாய்கள் பெரும்பாலும் மனிதர்களின் பயத்தை உணரக்கூடியவை. எனவே நீங்கள் ஒரு நாயை கண்டால், முதலில் நேரடி கண் தொடர்பை தவிர்க்க வேண்டும். உங்கள் பயம் நாயை ஆக்ரோஷமாக மாற்றக்கூடும். எனவே கீழே குனிந்தவாறு நாயை விரட்ட முயற்சிக்கலாம்.

மேலும் குடை அல்லது குச்சி போன்ற பொருளை வைத்து உங்களுக்கும் நாய்க்கும் இடையே ஒரு பாதுகாப்புத் தடையை ஏற்படுத்தலாம். நீங்கள் தப்பித்து ஓட முயற்சிக்க கூடாது. அதற்கு பதிலாக நாயை தான் விரட்ட வேண்டும். நீங்கள் ஓடினால் நாய் துரத்தும்.

Prevent

நீங்கள் தடை ஏற்படுத்திய பிறகும் நாய் உங்களை நெருங்கினால், உரக்க சத்தமிடுங்கள். எனவே நாய் பின்வாங்கலாம். மேலும் நாயின் கவனத்தை உங்களிடமிருந்து திருப்ப உங்களிடமுள்ள உணவை தூக்கி எறியுங்கள். எனவே நாயின் கவனம் அதில் திரும்பி விடும்.