#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாட்ஸப்பில் புது புது வண்ணத்தில் புத்தாண்டு ஸ்டிக்கர்ஸ் அனுப்புவது எப்படி? இத படிங்க!
உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள வாட்சப் மிகவும் பயன்படுகிறது. முன்பெல்லாம் பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு வந்தால் நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவது வழக்கம்.
தொலைபேசி என்ற ஓன்று வந்த பிறகு வாழ்த்து அட்டை அனுப்புவது முற்றிலும் நின்றுவிட்டது. ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு பிக்சர் மெசேஜ் என்ற ஒன்றை அனுப்பி வந்தோம். ஸ்மார்ட் போன், வாட்சப் இவை வந்த பிறகு வாழ்த்து அட்டைகள், விடீயோக்கள், அனிமேஷன் படங்கள், ஸ்டிக்கர்ஸ் என பலவிதமாக நமது வாழ்த்துக்களை வாட்சப் மூலம் அனுப்பி வருகிறோம்.
நாளை புத்தான்டு வருவதை ஒட்டி, புத்தாண்டிற்கு வாழ்த்து கூற புது புது ஸ்டிக்கர்ஸை அறிமுகம் செய்துள்ளது வாட்சப் நிறுவனம். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து வித்தியாசமான முறையில் உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்புங்கள்.
சரி, அந்த புது ஸ்டிக்கர்ஸை எப்படி பதிவிறக்கம் செய்றதுன்னு பாக்கலாம் வாங்க.
1 . உங்கள் வாட்சப் லேட்டஸ்ட் வெர்சனில் இல்லை என்றால், முதலில் உங்கள் வாட்ஸப்பை Play Store சென்று அப்டேட் செய்துகொள்ளவும்.
2 . பின்னர் உங்கள் வாட்ஸப்பில் ஏதாவது ஒரு மெஸேஜை ஓபன் செய்து, மெசேஜ் டைப் செய்யும் இடத்திற்கு செல்லவும்.
3 . பின்னர் இடது புறம் உள்ள ஸ்மய்லியை கிளிக் செய்யவும். இப்போது புதிதாக ஒரு அமைப்பு தோன்றும். அதில் GIF க்கு அடுத்து இருக்கும் ஸ்டிக்கர்ஸை கிளிக் செய்யவும்.
4 . அதன் வலது ஓரத்தில் புதிதாக சேர்க்கும், அதாவது Add பட்டன் ஓன்று இருக்கும். அதனை கிளிக் செய்தல் பலவிதமான புது ஸ்டிக்கர்ஸை உங்களால் காண முடியும்.
5 . அதில் புத்தாண்டு ஸ்டிக்கர்ஸை கண்டுபிடித்து பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம்.
6 . ஒருவேளை அங்கிருக்கும் ஸ்டிக்கர்ஸ் பிடிக்கவில்லை என்றால் கீழே scroll செய்து Get More Stickers என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
7 . தற்போது உங்களால் பலவிதமான ஸ்டிக்கர்ஸை காண இயலும். அதனை பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுடன் பகிரலாம்.