திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இட்லி மாவு தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை; இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.!
நாம் தினமும் இட்லி அல்லது தோசை போன்ற உணவுகளை கட்டாயம் சாப்பிடுவோம். அவ்வாறு நாம் சாப்பிடும் உணவுகளை தயாரிக்கும் முறை என்பது இருக்கிறது.
இட்லி மாவு அரைக்கும் போது மாவில் நாம் கைப்படாமல், கரண்டியை பயன்படுத்தி அரைப்பது சிறந்தது. அப்போது புளிப்பது தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
அதேபோல், அலுமினியம், ஈயம் பூசப்பட்ட பித்தளை பாத்திரம் போன்றவற்றில் மாவை வைத்தால் விரைவில் அவை புளித்து போகும். இதனால் எவர்சில்வர் பாத்திரத்தை பயன்படுத்தலாம்.
அடுப்புக்கு அருகில் மாவை வைக்காமல், அதனை தூர வைப்பது நல்லது. இட்லியுடைய ருசி என்பது அதன் புளிப்பு தன்மையில் இருப்பதால், புளிப்பு சரியான பதத்தில் இருப்பதை உறுதி செய்வோம்.
பிரிட்ஜ் உள்ள குடும்பங்கள் இன்றளவு ஃப்ரிட்ஜில் தங்களது மீதமுள்ள மாவை வைத்து பயன்படுத்திக் கொள்கிறது, ஆனால் பிரிட்ஜ் இல்லாதவர்கள மண்பானையை உபயோகம் செய்யலாம்.
நாம் குடிக்க மண்பானை தண்ணீரை உபயோகம் செய்கிறோம் என்றால், அதே முறையில் மற்றொரு பெரிய அளவிலான மண்பானை வாங்கி அதில் மாவு பாத்திரத்தை வைத்து விரைந்து புளிக்க விடாமல் தடுக்கலாம்.