#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மக்களே! உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு!
கோடை வெயில் கொழுந்து விட்டு எரிகிறது. மக்கள் வீட்டை விட்டே வெளியேவர அஞ்சும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் சென்னையில் சரியான அளவு மழை இல்லை என்பதால் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கத்தரி வெயில் ஆரம்பம் ஆகும் முன்பே வெயிலின் கொடூரம் அதிகமாக இருப்பதால் கத்தரி வெயில் ஆரம்பித்தால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்க உள்ளது என பிரபல தனியார் வானிலை ஆர்வலரான வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி உள்மாவட்டங்களில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடற்கரையிலிருந்து தள்ளி உள்ள ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
இதில் சோகமான விஷயம் என்னவென்றால் சென்னையில் தற்போது நிலவும் அதே 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நீடிக்கும் என்றும், மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், தொடர்ந்து இந்த பகுதிகளில் 2 முதல் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.