#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உடலுக்கு நன்மையளிக்கும் அரிசி கழுவிய தண்ணீர் ரசம்.. வீட்டிலேயே செய்வது எப்படி?.! மிஸ் பண்ணிடாதீங்க..!!
உடலுக்கு நன்மையளிக்கும் அரிசி கழுவிய தண்ணீர் ரசம் எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.
அரிசி கழுவிய தண்ணீரை சிலர் அப்படியே தூக்கி ஊற்றி விடுவர். ஆனால் அதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் அரிசி கழுவிய தண்ணீரை வைத்து ரசம் செய்தால் சுவை நாக்கிலேயே ஒட்டிவிடும். உடலுக்கும் மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 4
கருவேப்பிலை - 1 கொத்து
பூண்டு பல் - 6
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி புளி - எலுமிச்சை பழ அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
அரசி கழுவிய தண்ணீர் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
★முதலில் அரிசி கழுவிய தண்ணீர் தேவையான அளவிற்கு எடுத்து, அதில் புளியை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
★பத்து நிமிடத்திற்கு பின் ஊறிய தண்ணீரை கைகளால் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
★இதனுடன் தக்காளி சேர்ந்து கைகளால் நன்கு பிசைந்து, பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய விட வேண்டும்.
★எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து தாளித்து, ஒரு கொத்து கருவேப்பிலை, வரமிளகாய், இடித்து வைத்துள்ள பூண்டு பல் ஆகிவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
★வதங்கியதும் மிளகுத்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து, வடிகட்டி வைத்துள்ள புளிக்கலவையை சேர்கக வேண்டும்.
★இறுதியாக தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால் அரிசி கழுவிய தண்ணீர் ரசம் தயாராகிவிடும்.