#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கண் புருவத்தை அழகாக்கும் சூப்பர் சீரம்.! எப்படி பயன்படுத்துவது.?!
பெண்களுக்கு அவர்களின் கண்கள் தான் அழகு. அப்படிப்பட்ட கண்களுக்கு மேல் உள்ள புருவமும் அழகாக இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும். புருவம் அழகாக இருந்தால் தான் கண்கள் அழகாக தெரியும். கண்கள் அழகாக இருந்தால் தான் முகம் பிரகாசம் அளிக்கும்.
கண்களுக்கு அழகூட்டும் புருவங்கள் மெல்லியதாக, பார்க்க அசிங்கமாக இருந்தால் ஐப்ரோ பென்சிலைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இனிமேல் அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த சீரம் தடவிப் புருவத்தை அழகாக மாற்றலாம்.
சீரம் செய்யத் தேவையான பொருட்கள்:
கற்றாழை ஜெல் = 2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் = 1 டேபிள் ஸ்பூன்,
ஆமணக்கு எண்ணெய் = 1 டேபிள் ஸ்பூன்,
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் = 1.
செய்முறை: ஒரு கண்ணாடி கிண்ணத்தில் மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். கற்றாழை ஜெல் தண்ணீர் பதம் என்பதால் நன்றாக அடித்து கலக்கவும். இப்படி கலக்கும்போது ஒரு ஜெல் போன்றுத் திரண்டு வரும். இப்போது சீரம் தயாராகி விட்டது.
இந்த சீரத்தை புருவத்தில் பிரஸ் உதவியுடன் அப்ளை செய்ய வேண்டும். இதில் எண்ணெய் மட்டுமே இருப்பதால் உங்கள் கண்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்த சீரத்தை தினமும் இரவில் கண்களிலும், இமைகளிலும் அப்ளை செய்து வந்தால் நன்றாக உறங்குவீர்கள். அதோடு கருவளையம் நீங்கும். புருவத்தில் மாற்றம் ஏற்படும்.
கண் புருவங்களை அடிக்கடி கவனித்துக் கொள்வது மற்றும் தூய்மைப்படுத்துவது அவசியம். ஆனால் முகத்தின் அழகை கவனித்துக் கொள்ளும் அளவிற்கு புருவங்களைக் கவனிப்பது இல்லை. மேலும் புருவங்களை சுத்தம் செய்ய தினமும் ஒரு பஞ்சினால் பச்சைப் பாலைக் கொண்டுத் துடைக்கவும். ஏனென்றால் பச்சை பால் ஒரு கிளன்ஸ்சர் ஆகும். இப்படி அடிக்கடி புருவங்களை சுத்தம் செய்வது சருமத்திற்கும், கண் இமைகளுக்கும் ஆரோக்கியம் அளிக்கும்.