#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாதவிடாய் காலத்தில், பெண்கள் உடற்பயிற்சி செய்தால் என்ன நேரிடும்?
பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சியை செய்யலாமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தபோக்கினால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்து விடுவார்கள்.
பெண்களில் சிலர் மாதவிடாய் காலத்தில் வலியால் அவதிப்படுவார்கள். இதனால் தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் அந்த மூன்று நாட்களில் உடற்பயிற்சியை தவிர்க்கின்றனர்.
ஆனால் உண்மையில் பெண்கள் அந்த சமயத்தில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். இந்த சமயத்தில் பெண்கள் உடற்பயிற்சியை செய்வதன் மூலம் நம் மூளையில் உள்ள என்டோர்பின் ஹார்மோன் சுரக்கப்பட்டு ஒருவித மன அமைதியை தருவதுடன், மாதவிடாய் வலியையும் குறைக்கும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வதினால் ரத்தபோக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதுவும் இதயத்திற்கான ஓட்டம், ஜாக்கிங், வாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளை மாதவிடாய் காலத்தில் செய்வது மிகவும் நல்லது என சிகிச்சையாளர்ககள் கூறுகின்றனர்.
எனவே மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது மதுவுமின்றி, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். உடற்பயிற்சி செய்தால் மாதவிடாய் காலங்களில் சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும்.