பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆசீர்வாதம் செய்ய கை நீட்டிய பாதிரியார்! அருகில் நின்ற சிறுமி செய்த காரியம்! வைரல் வீடியோ
பாதிரியார் ஒருவர் ஆசிர்வாதம் செய்வதற்காக கைகளை நீட்டியபோது, பாதிரியார் ஹைஃபை கேட்கிறார் என நினைத்து சிறுமி பாதிரியாருக்கு ஹைஃபை கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
பொதுவாக குழந்தைகள் என்றாலே குறும்பு நிறைந்தவர்கள். மிகவும் இறுக்கமான இடங்களில் கூட ஒரு குழந்தையின் குறும்புத்தனம் அனைவரையும் சிரிக்கவைத்துவிடும். அதுபோன்ற காட்சிகளில் ஒன்றுதான் இது. தாய் மற்றும் அவரது மகள் இருவரும் சர்ச்சில் ஜெபம் செய்துவிட்டு அங்கிருக்கும் பாதிரியாரிடம் ஆசிர்வாதம் வாங்க வருகின்றனர்.
அவர்களை ஆசிர்வாதம் செய்வதற்காக பாதிரியார் ஒரு கையை மேலே தூக்கி மறுகையால் ஆசிர்வாதம் செய்து ஜெபிக்க தொடங்குகிறார். இதனை பார்த்த அந்த சிறுமி, பாதிரியார் கையை நீட்டியதும், அவர் ஹைஃபை கொடுக்கிறார் என நினைத்து பதிலும் அந்த சிறுமியும் பாதிரியாருக்கு ஹைஃபை கொடுக்கிறார்.
இதனை பார்த்த அந்த பாதிரியார் தனது கைகளால் தனது வாயை மறைத்துவிட்டு சிரிப்பை அடுக்கிக்கொண்டே ஜெபம் செய்கிறார். இந்த காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட, இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி 20 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
Bendiciones a todos y todas...!! Feliz día lleno de Lucha y Paz. pic.twitter.com/LGjPogeGz8
— 𝘚𝘦𝘤𝘳𝘦𝘵𝘰 𝘢 𝗩𝗢𝗖𝗘𝗦 🐦 (@ruidiaz_ddhh) October 21, 2020