சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
ஜூன் 21..! கணவன் மனைவி நாளை கட்டாயம் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய நாள்..! ஏன் தெரியுமா..?
இந்தியாவில் நாளை காலை 10:22 முதல் மதியம் 1:44 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்ட உள்ளது. 2020ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இதுவாகும். அடுத்து டிசம்பர் 14ம் தேதி நிகழும்.
நாளை நிகழ இருப்பது நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஆகும். இந்த சூரிய கிரகணத்தில் நாம் என்ன செய்யவேண்டும், என்ன செய்ய கூடாது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
செய்ய கூடியவை:
* கிரகணத்தின்போது பொதுவாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருக்கும். அதனால் கிரகண நேரத்தில் நாம் வீட்டிலேயே இறைவனை நினைத்து வழிபாடு செய்வது அவசியம்.
* இறைவனின் திருநாமங்களை உச்சரிப்பது அவசியம். உங்களுக்கு பிடித்த கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு மனதார வணங்கி ஆராதித்தாலே அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.
* கிரகணம் முடிந்தபிறகு வீட்டை சுத்தம் செய்து அனைவரும் குளிப்பது மிகவும் அவசியம்.
செய்ய கூடாதவை:
* இந்த நேரத்தில் கிருமிகள் அதிக அளவில் பெருகக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் கிரகண நேரத்தில் சமைத்தல், வெளியே செல்லுதல், நீர் பருகுதல் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
* சூரிய கிரகணத்தின் போது நேரடியாக சூரியனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மீறிப்பார்க்கும்போது சில நேரங்களில் கண்பார்வை முற்றிலும் பறிபோக வாய்ப்பு உள்ளது.
* கிரகணத்தின் போது கண்டிப்பாக நாம் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் செரிமான கோளாறு வயிறு சார்ந்து பிரச்சினைகள் ஏற்படும்.
* கிரகண நேரத்தில் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் கண்டிப்பாக வெளியே வரக்கூடாது.
* குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இருக்கும் கணவன் மனைவி, புதுமண தம்பதியினர் கட்டாயம் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். கிரகணத்தின்போது உறவில் ஈடுபட்டு, ஒருவேளை குழந்தை தரித்தால் குழந்தை குறைபாட்டுடன் பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.