Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
அந்த மனசுதான் சார் கடவுள்.. குழந்தைக்கு பால் வாங்கி வருவதற்குள் புறப்பட்ட இரயில்.. கார்ட் நெகிழ்ச்சி செயல்.!
அம்மா என்றால் பிடிக்காத நபர்கள் உலகத்தில் இல்லை. அன்னை தனது பிள்ளைக்காக எதையும் செய்யத்துணிந்தவள் என்பது உலகறிந்த விஷயம்.
அந்த வகையில், இரயில் பயணம் ஒன்றில் தாய் பசியில் தவித்த குழந்தைக்கு பால் வாங்க சென்றுள்ளார். அப்போது, அவரின் இரயில் புறப்பட்டுவிடவே, பதறிப்போன தாய் தவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: "ஒற்றுமையே பலம்" - துப்பாக்கியுடன் நுழைந்த திருடனை விரட்டிப்பிடித்த மக்கள்..!
இதனைக்கண்ட இரயிலின் கார்ட், உடனடியாக ஓட்டுனருக்கு தொடர்புகொண்டு இரயிலை நிறுத்தி இருக்கிறார். இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரயில், மீண்டும் நிறுத்தப்பட்டது.
A mother went to buy milk, and the train started. The guard saw and stopped the train.🙏❤️ pic.twitter.com/If8PRMxG5T
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) January 7, 2025
கார்ட் நெகிழ்ச்சி செயல் - குவியும் பாராட்டு
இதனையடுத்து, தாய் விரைந்து சென்று இரயிலில் தனது பெட்டியில் ஏறிக்கொண்டார். இதுதொடர்பான காணொளி எங்கு பதிவு செய்யப்பட்டது? என்ற விபரம் இல்லை. ஆனால், தற்போது வைரலாகி வருகிறது. பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
அதேபோல, இரயில் பயணத்தில் இவ்வாறான அனுபவம் கொண்ட தாய் ஒருவர் தனது கருத்தையும் பகிர்ந்து இருக்கிறார். அதாவது, கடந்த ஆண்டு தாய், தனது மகளுடன் இரயில் பயணம் செய்துள்ளார்.
அப்போது இருவரும் பசியால் தவிக்க, அதனை பார்வையில் புரிந்துகொண்ட டிக்கெட் பரிசோதகர், அடுத்த இரயில் நிலையம் வந்ததும் குழந்தை மற்றும் தாய்க்கு உணவு ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறார். தற்போது மேற்கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்ரிக்காட் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!?