குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சுவையான வெஜிடபிள் தோசை செய்வது எப்படி...



Vegetable dosa recipe in Tamil health Tips

மிகவும் எளிதான ஆரோக்கியமான காய்கறிகள் நிறைந்த வெஜிடபிள் தோசை செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

தோசை மாவு - 2 கப்
வெங்காயம் - 1
பீன்ஸ் - 10
முட்டைக்கோஸ் - 50 கிராம்
கேரட் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு

​​​health tips

முதலில் வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கடாயை அடுப்பில் வைத்ததும், எண்ணெயை சூடேற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும், இதனுடன் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

வெங்காயம் வதங்கிய பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பின்னர் இந்த கலவையை தோசை மாவில் ஊற்றி கொத்தமல்லி சேர்த்து கிளறிவிடவும், இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசைகளை ஊற்றி எடுத்தால் சுவையான வெஜிடபிள் தோசை தயார்.