#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா? இதோ அற்புதமான ஜூஸ்!
பொதுவாக உடல் எடையை குறைக்க பலரும் பல்வேறு விதமான முறைகளை செய்து வருகின்றனர். ஆனால் உடல் எடையை எப்படி ஆரோக்கியமான முறையில் குறைப்பது என தெரியாமல் புலம்பி வருகின்றனர். அதன்படி எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் சில உணவுகளை கட்டுப்படுத்துவதாலும், சில உணவுகளை சாப்பிடுவதாலும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் எழுந்தவுடன் டீ மற்றும் காபி போன்றவற்றை குடிக்காமல் நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். இந்த ஜூஸ் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் கபம், வாதம், பித்தம், போன்றவை சமநிலைப்படுத்தப்படும். தலைமுடி பிரச்சினை இருந்தால் இந்த ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.
அதேபோல் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் கண்களில் பார்வை குறைபாடு மற்றும் பற்கள் சொத்தை போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஜூஸ் காலையில் கொடுக்கலாம். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து இன்சுலின் பயன்பாடும் குறையும். மேலும் செரிமான பிரச்சனை, வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்கள் இந்த ஜூஸ் குடிப்பதால் நல்ல பலனளிக்கும்.