உங்கள் வாட்ஸப்பில் உள்ள மெசேஜ் எல்லாம் விரைவில் காணாமல் போகப்போகிறது! என்ன விஷயம் தெரியுமா?



WhatsApp auto delete message in 7 days new feature

பயனர்கள் அனுப்பும் மற்றும் பெரும் செய்திகளை 7 நாட்கள் கழித்து தானாக டெலிட் செய்யும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது வாட்சப் நிறுவனம்.

உலகில் உள்ள முன்னனி நிறுவனங்களில் ஒன்றான வாட்சப் நிறுவனம் தனது பயனர்களுக்கு அவ்வப்போது புது புது வசதிகளை அறிமுகம் செய்துவருகிறது. அந்தவகையில் வாட்சப் விரைவில் மேலும் ஒரு புது வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.

WhatsApp update

அதாவது நாம் மற்றவறுகளுக்கு அனுப்பிய, மற்றவர்கள் நமக்கு அனுப்பிய தகவல்களை 7 நாட்கள் கழித்து தானாகவே டெலிட் செய்யும்படியான வசதியை வாட்சப் விரைவில் கொண்டுவர இருக்கிறது. தனிப்பட்ட நபருடனான உரையாடல்கள் அல்லது நீங்கள் ஒரு நிர்வாகியாக இருந்தால் உங்கள் குழுவின் உரையாடல்களுக்கும் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.

உங்களுக்கு இந்த வசதி வேண்டுமென்றால் இதனை வாட்சப் செட்டிங்ஸ் சென்று இந்த வசதியை ஆன் செய்து கொள்ளலாம். வேண்டாம் என்றால் பயன்படுத்தத் தேவை இல்லை. உங்கள் செய்தியும் தானாக அழியாது. தற்போது சோதனை முறையில் இருக்கும் இந்த வசதி விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என வாட்சப் நிறுவனம் கூறியுள்ளது.