#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெங்களூர் அணியின் தொடர் தோல்விக்கு இதுதான் காரணமா? ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 23 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் கைதராபாத் அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளது. சென்னை அணி 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்று முதல் இட்டதில் உள்ளது.
இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணி இதுவரை நடந்த அணைத்து போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. கொல்கத்தா அணியுடன் வெற்றிபெறும் என எதிர் பார்க்கப்பட நிலையில் மோசமான பந்து வீச்சால் கடைசி நேரத்தில் தோல்வியை சந்தித்தது பெங்களூர் அணி.
இந்நிலையில் பெங்களூர் அணியின் தொடர் தோல்விக்கு இதுதான் காரணம் என பதில் கூறியுள்ளார் அணியின் வீரர் டீ வில்லியர்ஸ். இந்த சீசனில் எங்கள் அணியின் ஃபீல்டிங் மிக மிக மோசம். ஒவ்வொரு போட்டியிலும் சில கேட்ச்களை விடுவது நல்லதல்ல.
மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராகவும் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டியது. ஆனால் தோற்றுவிட்டோம். அந்த மூன்றிலும் வென்று 6 புள்ளிகளுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் மோசமான ஃபீல்டிங் தான் தோல்விகளுக்கு காரணம் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.