கைவிரித்த 3 ஆம் நீதிபதி., அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிலை அதோகதி.!!



3rd-judge-about-senthil-balaji-case

மைச்சர் செந்தில் பாலாஜி கடித்து குறித்து 3 ஆம் நீதிபதி :-

கைது தொடர்பாக முறையான தகவல்கள் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்திருப்பது முற்றிலும் பொய். கைதுக்கு ஒத்துழைப்பு தராமல் விசாரணை அமைப்பு மீது புகார் செலுத்துவது ஏற்க முடியாத ஒன்றாகும் என்று நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்தாலும் அவரை காவலில் எடுத்து விசாரித்திருக்கலாம், ஆனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சி கூட செய்யவில்லை என்று நீதிபதி கார்த்திகேயன் குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளார். முதல் 15 நாட்களுக்குப் பிறகு அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம். 

அமைச்சர் செந்தில் பாலாஜி காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் நான் உடன்படுகிறேன் என்றும் மூன்றாம் நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது, 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்கும் என்று 3 ஆம் நீதிபதி தெரிவித்துள்ளார்