#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அரசியலில் வெற்றிபெற அதுமட்டும் போதாது, இதுவும் வேண்டும்! தெறிக்கவிடும் ரஜினிகாந்த்!
இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினிகாந்த் அவர்கள்தான். ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் சிலமாதங்களுக்கு முன்பு தந்து அரசியல் வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசினார் நடிகர் ரஜினி.
அவர் பேசுகையில் விரைவில் தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், அதற்கான வேலைகளை நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இவரது நண்பரும், சக நடிகருமான உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கட்சி ஆரம்பித்து அதற்கான கொடி, கட்சி பெயர் அனைத்தையும் அறிவித்துவிட்டார்.
தான் விரைவில் அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினிகாந்த அதன்பிறகு அதற்காக என்ன ஏற்பாடுகள் செய்தற் என்பது அனைவர் மத்தியிலும் கேள்விக்குறியாகவே இருந்தது. இந்நிலையில் கட்சிக்கான பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும் விரைவில் களத்தில் இறங்கப்போவதாகவும் நடிகர் ரஜினி தெரிவித்தார்.
இந்நிலையில் தனது அரசியல் வேலைகள் பற்றியும் அடுத்தகட்ட நடவடிக்கைள் பற்றியும் நடிகர் ரஜினி பேசும்போது மக்கள் ஆதரவில்லாமல் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்கமுடியாது. நிச்சயம் மக்களின் ஆதரவு வேண்டும் எனவே அதற்கான வேளைகளில் இறங்கப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.