தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#Breaking: பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சரை பேசவிடாமல் கடும் அமளி.. அதிமுகவினர் வெளிநடப்பு..!!
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று காலை 10 மணியளவில் 2023 - 2024 ம் ஆண்டுக்கான பொது இ-பட்ஜெட் தக்கலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக மக்கள் எதிர்பார்த்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 மற்றும் சிலிண்டர் மானியம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலை தொடங்கியபோது, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பட்ஜெட் வாசிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கையிலிருந்து எழுந்து அமளி செய்து வருகின்றனர்.
சட்டப்பேரவை சபாநாயகர் அதிமுகவினரை அமைதிப்படுத்தி பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்றவுடன் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினாலும், அந்த அமளி தொடர்ந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி மற்றொருபுறம் பேசிக்கொண்டிருந்தாலும் அவரின் பேச்சுக்கள் அவைக்குறிப்புல் இடம்பெறாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துவிட்டார். இதனால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.