"ஆளுநரே பொறுப்பு" - மாணவி பலாத்காரம் விவகாரம்; வேல்முருகன், மதிமுக பாய்ச்சல்.!



  Anna University Case Velmurugan MDMK Says Governor Is Responsible 

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரம், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வையை கிளப்பி இருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை பேசுபொருளாக்கி இருக்கிறது. மேலும், அவையில் விவாதமும் நடைபெறுகிறது.

இதனிடையே, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு அதிமுக, பாஜக, பாமக, நாதக நிர்வாகிகள் போராடியபோது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதம் நடந்து வருகிறது. 

புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ பேச்சு

அப்போது பேசிய புரட்சி பாரதம் எம்.எல்.ஏ பூவை ஜெகன், "யார் அந்த சார்? என காவல்துறையினர் விரைந்து கண்டறிய வேண்டும். அண்ணா பல்கலையில் பதிவாளர் தற்போது வரை பதவி நீக்கம் செய்யப்படவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார். 

இதையும் படிங்க: நீங்கள் கொடுக்குற ரூ.1000 யாருக்கு வேணும்.. இதுதான் எங்களுக்கு வேண்டும்? - சௌமியா அன்புமணி ஆவேசம்., கைது.!

Anna University Case

வேல்முருகன் பேச்சு

அதனைத்தொடர்ந்து பேசிய தவாக வேல்முருகன், "அண்ணா பல்கலைக்கழகம் வேந்தர் என்ற முறையில், பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விசயத்திற்கு, ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். அவர் ஏன் இதுவரை இத்துயரம் குறித்து வாய் திறக்கவில்லை. ஞானசேகரன் கூறிய சார் யார் என ஆளுநர் மளிகை விளக்கம் அளிக்க வேண்டும்" என கூறினார். 

மதிமுக தரப்பு பேச்சு

மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலை பேசுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த துயரத்திற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசு சிறப்புடன் செயல்படுகிறது" என பேசினார்.

இதையும் படிங்க: யார் அந்த சார்? - உரிய விசாரணை நடத்த திருமாவளவன் கோரிக்கை.!