ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றாங்க, எய்ட்ஸில் ஏன் முன்னணி இடம்? இயக்குனர் டிஜே ஞானவேல்.!
"என் நெஞ்சமெல்லாம் பதறுகிறது., ஒரு ஆணியை கூட.," - அண்ணாமலை கடும் கண்டனம்..!

சென்னை முட்டுக்காடு பகுதியில், ஜனவரி 25 அன்று நள்ளிரவு நேரத்தில், கட்சிக்கொடி ஒன்று கட்டப்பட்ட காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், 3 பெண்கள் பயணித்த காரை துரத்தி அச்சுறுத்தலில் ஈடுபட்டது. இந்த சம்பவம் குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில், சென்னையில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, "டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்ததான விசயத்திற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி தான். கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சம்பவத்தின் வீடியோவை பார்க்கும்போது நெஞ்சமெல்லாம் பதறுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் எப்போதும் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது.
இதையும் படிங்க: நான் வெடிகுண்டு வீசவா? சீமானின் சர்ச்சை பேச்சு.!
பாலியல் குற்றவாளிகளின் புகலிடம் திமுக என்பதை உணர்த்தும் மற்றொரு காணொளி. தமிழ்நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி திமுக ஞானசேகரனை அடுத்து இந்த கேவலமான சம்பவம் நடைபெற்று இருக்கிறது. 😡😡😡
— Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 (@Johni_raja) January 29, 2025
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த திராவிடியா மாடலை தமிழக மக்கள் ஆட்சியை… pic.twitter.com/orwnvSkVZQ
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
திமுக கொடி கட்டிய காரில் வந்த நபர்கள், பெண்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. இந்தியாவுக்கே சுதந்திரம் கிடைத்தாலும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. எங்கும் பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு என்பது இல்லை. மாநில அரசு காவல்துறையினருக்கு கண்காணிப்பு வாகனங்கள் வாங்கிக்கொடுக்க வேண்டும்.
கையாலாகாத திமுக அரசு, காவல்துறை முன்னேற்றத்திற்கு, மக்கள் பாதுகாப்புக்கு ஆணியை கூட கிள்ளிப்போடவில்லை. ஈசிஆர் பகுதியில் நான் சென்றுவரும்போதே பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை கவனித்து இருக்கிறேன்" என பேசினார்.
இதையும் படிங்க: திமுக அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் - வேங்கைவயல் விவகாரத்தில் திருமாவளவன்.!