சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!

விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை சீரியலில் சுருதி நாராயணன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆபாச வீடியோவான அது தன்னுடையது இல்லை என்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் சுருதி நாராயணன் விளக்கம் கொடுத்து இருந்தார்.
இதனை தொடர்ந்து அடுத்த சில வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது அவருக்கு ஹீரோயினாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தான் ஹீரோயினாக நடித்த கட்ஸ் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டு இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சுருதி நாராயணன் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி என தெரிவித்து இருக்கின்றார். இந்த படத்தை இயக்குனர் ரங்கராஜ் இயக்கி தயாரித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஸ்ரீலேகா, ஜாக்குவார் தங்கம், கில்டு செயலாளர் துரை, இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் உள்ளிட்ட பல்வேறு பட குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கின்றனர். சுருதி நாராயணன் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.