#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோபாலபுர இளவரசருக்கு ஒரு கேள்வி?! நச்சென்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை..!!
பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் வெளியீட்டின் போது, தேர்தலில் வெற்றி பெற்றால் இந்திய குடிமகன் குடும்பங்களுக்கு 15 லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறியிருந்தார் என்று திமுகவினர் கூறி வருகிறார்கள். முன்னதாக இதனை வானதி ஸ்ரீனிவாசன் கண்டித்து பேட்டி அளித்திருந்தார்.
தற்போது, இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன்.
ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி. சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும்.
1000 கோடி ரூபாய் ஊழலுக்கு பேர்போன துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா?" என்று அதில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் திரு @Udhaystalin, தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன்.
— K.Annamalai (@annamalai_k) July 12, 2023
ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி.
சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல…