மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Bigbreaking: சிறையில் இருந்தே முதல்வர் பணி.?! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.!
தலைநகர் டெல்லியின் முதல்வராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மாநிலத்தின் மதுபான கொள்கை குறித்த பண மோசடி வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில், மார்ச் 28-ந்தேதி அமலாக்கத்துறையின் காவலில் வைத்தவாறு விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடந்த விசாரணையின் அடிப்படையில் ஏப்ரல் 1-ந்தேதியான இன்று வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டது.
இத்தகைய நிலையில் மீண்டும் கெஜ்ரிவால் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரம் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது. இதன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் ஜெயிலில் அடைக்கப்படவுள்ளார். இதுவரை அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. எனவே சிறையில் இருந்தவாறு பதவியை தொடர்வாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.