#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சட்டமன்றத்தின் மாண்பை கெடுத்த பா.ஜனதா எம்.எல்.ஏக்கள்: வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய எதிர்கட்சி..!
உத்தரப் பிரதேச மாநிலம், சட்டப் பேரவையில் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, ஆளும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சபை நடவடிக்கைகளின் போது, பா.ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ராகேஷ் கோஸ்வாமி தனது செல்ஃபோனில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இன்னொரு சட்டமன்ற உறுப்பினர், அதே நேரத்தில் தனது கையில் தடை செய்யப்பட்ட பொருளான புகையிலையை கொட்டி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார்.
இந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் செய்தவற்றின் வீடியோவை சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவுடன், "சபையின் கண்ணியத்தையும், மாண்பையும் கெடுக்கும் பா.ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்! என்று குறிப்பிட்டிருந்தது.
सदन की गरिमा को तार-तार कर रहे भाजपा विधायक!
— Samajwadi Party (@samajwadiparty) September 24, 2022
महोबा से भाजपा विधायक सदन में मोबाइल गेम खेल रहे, झांसी से भाजपा विधायक तंबाकू खा रहे।
इन लोगों के पास जनता के मुद्दों के जवाब हैं नहीं और सदन को मनोरंजन का अड्डा बना रहे।
बेहद निंदनीय एवं शर्मनाक ! pic.twitter.com/j699IxTFkp
இவர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் குறிப்பிட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் செயலைகடுமையாக விமர்சித்து வருகின்றனர்.