ரஜினி, கமல் சுயநலவாதிகள் ... வெறுப்பை காட்டும் கமலின் உடன்பிறப்பு !!



Charukasan about Rajini and kamal

ரஜினி, கமல் ஆகிய இருவருமே தங்களது சுயநலத்துக்காக வாழ்ந்தவர்கள். இருவருமே மக்களுக்கு என்ன செய்தார்கள்? இவர்களுக்கு ஓட்டு போடுவதை விட ஆட்சி செய்து வரும் தமிழரான எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதில் தவறில்லை என்று சாருஹாசன் தெரிவித்துள்ளார்.

ஹலோ எப்.எம்.மில் நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசனின் பேட்டி ஒலிபரப்பாகியது.

தமிழகத்தை பொறுத்தவரையில் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட கருணாநிதி, கேரளாவை சேர்ந்த எம்.ஜி.ஆர்., கர்நாடகாவில் இருந்து வந்த ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியை பிடித்து சாதனை செய்துள்ளதால் புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் குறித்து பேசியபோது, ‘இவர்கள் இருவரும் தங்களது சுயநலத்துக்காக வாழ்ந்தவர்கள். இருவருமே மக்களுக்கு என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பிய அவர் அதேவேளையில் கமலை விட ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளதாகவும், தமிழர்கள் அவரை கடவுளாக பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

rajinikanth

ரஜினி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும், கமல் தமிழர் கட்சிகள் மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறிய சாருஹாசன் ஆனால் இருவருக்கும் ஓட்டு போடுவதை விட ஆட்சி செய்து வரும் தமிழரான எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், கடந்த கால நினைவுகள், அவரது வாரிசுகளில் அரசியலுக்கு வரப்போவது யார்? என்ற கேள்விக்கான பதில் உள்பட பல்வேறு தகவல்களை தொகுப்பாளர் ராஜசேகருடன் அவர் பகிர்ந்துள்ளார்.