திருமணத்திற்காக பதிவியேற்பு நிகழ்வை தவறவிட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்!
மேற்கு வங்க நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினருமான நுஸ்ரத் ஜஹான், துருக்கியில் திருமணம் செய்துகொண்டதால் பதியேற்பை தவற விட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் பசிர்ஹத் மக்களவை தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பெங்காலி நடிகை நுஸ்ரத் ஜஹான், சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் நுஸ்ரத் ஜஹானுக்கும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் உள்ள போட்ரம் நகரில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ஜாதவ்பூர் எம்.பியான மிமி சக்ரபர்த்தியும் கலந்துகொண்டார். இதனால் இருவரும் மக்களவை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தவறிவிட்டதாக கூறப்படுகிறது.