#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#BigBreaking: அதிமுக வட்டாரத்தில் பேரதிர்ச்சி... முன்னாள் அமைச்சர் கைது., பரபரப்பு வீடியோ வெளியானது..!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த புகாரில், முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகா மாநிலம் ஹசன் நகரில் போலீஸ் வாகனத்தை பார்த்து தப்பி ஓட முயன்ற நிலையில் சுற்றி வளைத்து போலீஸ் கைது செய்தது. pic.twitter.com/UgVFy3snMm
— tamilmarai (@tamilmarai) January 5, 2022
இதனையடுத்து, காவல் துறையினர் முன்னாள் அதிமுக அமைச்சர் இராஜேந்திர பாலாஜியை கைது செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில், அவர் தலைமறைவானார். இராஜேந்திர பாலாஜியை தேடி வந்த காவல் துறையினர், தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.