#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழக முன்னாள் அமைச்சர் மரணம்! அரசியல் தலைவர்கள் இரங்கல்!
தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
பரிதி இளம்வழுதி 1996 முதல் 2001 வரை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி வகித்தவர்.
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்தவர்.
2013-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்தார்.
பரிதி இளம்வழுதி, தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்று காலை அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.