பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகை குஷ்பு பதிவிட்ட ஒத்த ட்விட்டர் பதிவு! மரண கலாய் கலாய்த்த காயத்ரி ரகுராம்! வைரலாகும் ட்விட்டர் பதிவு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக விளங்குபவர்கள் குஷ்பு மற்றும் காயத்ரி ரகுராம். இவர்கள் இருவருமே மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலமானவர்கள். இதில் குஷ்பு தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காயத்ரி ரகுராம் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்.
இவர்கள் இருவருமே நாட்டில் நடக்கும் நடப்புகளை வைத்து எப்போதும் ட்வீட்டரில் சண்டையிட்டு கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை ஒரு படி மேலே சென்று காயத்ரி குஷ்புவை ட்விட்டரில் மரணகலாய் கலாய்த்துள்ளார்.
அதாவது சமீபத்தில் நாம் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் சமூக வலைத்தள பக்கங்களிலிருந்து விலக உள்ளதாக ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. அதற்கு நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நானும் இந்த ஞாயிறு கிழமை முதல் ஐஸ் கிரீம் சாப்பிடுவதை திருத்த உள்ளேன் என பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை காயத்ரி ரகுராம், நல்லது கொழுப்பு குறையும் என கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
Good kozhupu koraiyum. https://t.co/qhsHVjeYj9
— Gayathri Raguramm (@gayathriraguram) March 3, 2020