#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
த.வா.க தலைவரின் கொலை மிரட்டல் காரணமாக பா.ஜ.க-வில் இணைந்தேன்.. காயத்ரி கண்ணீர் பேட்டி..!
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்ததால் பா.ஜ.க-வில் இணைந்துள்ளதாக காயத்ரி கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் எம்.எல்.ஏ-வுமான வேல்முருகன் தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். என்னை காப்பாற்றி கொள்ள பா.ஜ.க-வில் சேர்ந்து விட்டேன் என வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் எம்.எல்.ஏ-வுமான வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:-
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனின் மனைவியாக இருந்தவள் நான். அவரால் எனக்கு வெளியில் சொல்ல முடியாத துன்பங்கள் ஏற்பட்டன. அவரிடமிருந்து விடுதலைக்கு வழி தேடிக் கொண்டிருந்தேன். கடந்த 2018 இல் விவாகரத்து செய்து கொள்ளலாம் என வேல்முருகன் வலியுறுத்தினார்.
விவாகரத்துக்கு சட்டப்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டு அவரிடமிருந்து பிரிந்து வெளியே வந்துவிட்டேன். தற்போது காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன், அவர் என்னை பழிவாங்கும் எண்ணத்தில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.
வேல்முருகன் தி.மு.க கூட்டணியில் செல்வாக்கோடு எம்.எல்.ஏ-வாக இருப்பதால் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. என்னை காப்பாற்றிக் கொள்ள எனக்கு தெரிந்த பா.ஜ.க-வினர் வாயிலாக அண்ணாமலையை சந்தித்து பா.ஜ.க-வில் இணைந்து விட்டேன். இனி என்னை அவர் காப்பாற்றுவார், இவ்வாறு அவர் கூறினார்.