சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்த செய்திகள் வெறும் வதந்தி; பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம்.. அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்..!
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்து கட்டணம் உயர்வதை பற்றி தவறான முறையில் செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு குறித்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு பேருந்து கட்டணம் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அரசு பேருந்து கட்டணம் உயர்த்துவதை பற்றி, எந்த ஒரு அட்டவணையும் தயாராகவில்லை என்றும், அரசு பேருந்தில் இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் போடப்படும் போது ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால் அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகள் கட்டணமும் தானாக உயர்த்தப்படும் என்பதுதான் ஒப்பந்தத்தின் விதி, அப்படிதான் பர்மிட் வழங்கப்படும்.
கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கட்டணம் உயர்ந்து உள்ளது அதனால் அந்த மாநிலத்திற்கு செல்லும் தமிழக பேருந்து போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும். அந்த அட்டவணையை குழப்பி தமிழ் நாட்டில் இயங்கும் அனைத்து பேருந்துகளுக்கும் கட்டண உயர்வு அட்டவனை தயாராகி வருவதாக தவறான தகவல் பரப்படுகிறது.
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் நிதி சூறையாடப்பட்டு நெருக்கடியில் சிக்கியது. ஆனாலும், தமிழக முதல்வர் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
நகர பேருந்துகளில் பெண்கள் தமிழக முழுவதும் இலவச பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டம் நன்றாக செயல்பட்டு வருகிறதா என்று கண்காணித்து வருகிறார். கடந்த ஆண்டில் மட்டும் 112 கோடி இலவசப் பயணங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கான நிதியை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்.
ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் கட்டண உயர்வு இல்லாமல் அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயங்கி வருகின்ற சூழ்நிலையில் கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டதுஎன்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.