பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தமிழக அரசியலில் பரபரப்பு... பாஜக வுடன் கூட்டணியில் இருக்கிறதா தேமுதிக.? விஜயகாந்த் அறிவிப்பு.!
2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சியின் தமிழ் மாநில தலைவரான அண்ணாமலை ஐபிஎஸ் ராமேஸ்வரத்திலிருந்து இன்று நடை பயணத்தை துவங்குகிறார். இந்த நடை பயணத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்கின்றன.
இந்த நடை பயணத்தில் தேமுதிகவும் கலந்து கொள்ளும் என தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்து இருக்கிறார். இந்த நடை பயணத்திற்கு கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு கொடுத்துள்ள நிலையில் தற்போது தேமுதிகவும் பங்கேற்க இருக்கிறது.
கடந்த சில காலங்களாக தேமுதிகவை கண்டு கொள்ளாமல் இருந்த பாஜக தற்போது நடை பயணத்திற்கு அழைப்போடு திருப்பதியின் மூலம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெறும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.