பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
நான் ஒரு பெண் தலைவர் என்பதால், இப்படியெல்லாம் செய்யலாமா? வேதனையில் தமிழிசை சவுந்திரராஜன்
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை வருவதை பார்த்து, அதே விமானத்தில் பயணம் செய்த மாணவி சோபியா “பாசிச பாஜக ஒழிக” என்று முழக்கமிட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த தமிழிசை, தூத்துக்குடி விமானத்திற்கு வந்த உடன், விமானதுறை அதிகாரிகளிடம் மாணவி சோபியா செயலை கண்டித்து புகார் அளித்தார். பின்னார் மாணவி சோபியா கைது செய்யப்பட்டார்.
கருத்துரிமையை பறிப்பதாக இருக்கிறது என அனைவரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து சோபியாவுக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த சர்ச்சை தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 ஆம் தேதி, தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜகவிற்கு எதிராக, சோபியா முழக்கமிட்ட சம்பவத்தை விவரித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விமானத்திற்குள் கோஷமிடலாமா? 28 வயது பெண்ணுக்கு சட்ட திட்டங்கள் தெரியாது என சொல்வது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பல மணி நேரத்திற்கு பிறகு, சோபியாவின் தந்தை கொலை மிரட்டல் விடுத்ததாக தம்மீது களங்கம் கூறுவது சரியா? என்றும் தமிழிசை வினவியுள்ளார்.
தாம் ஒரு பெண் தலைவர் என்பதால், சமூக வலைத்தளங்கள் மற்றும் நேரில் தவறாக சித்தரிப்பதும், அதனை அரசியல் கட்சித்தலைவர்கள் ஆதரிப்பதும் சரியானது அல்ல என, அவர் வேதனை தெரிவித்துள்ளார். கடுமையான விமர்சனைகளை எதிர்கொள்ளும் தம்மிடம், பொறுமை வேண்டும் என ஆலோசனை சொல்வது வேடிக்கை என்றும் தமிழிசை கூறியுள்ளார்.