பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கமலஹாசனின் நோக்கம் இது தான்! அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேச்சு!
கமல்ஹாசனின் ஒரே நோக்கம் அதிமுக அரசு மீது புழுதிவாரி தூற்றுவது மட்டுமே என அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக சட்டப்பேரவைக்கு 2021ம் ஆண்டு தான் தேர்தல் வரும் என்று திட்டவட்டமாக கூறினார். அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்காதது குறித்த அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு யாருக்கு எந்த பொறுப்பை வழங்குவது என்பது முதலமைச்சரின் முடிவுக்கு உட்பட்டது என்று ஜெயக்குமார் பதில் அளித்தார்.
எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதால் மோடி தான் பலசாலி என்கிற ரீதியில் ரஜினி பேசியது குறித்த கேள்விக்கு யார் பலசாலி என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
மேலும் நடிகர் கமலகாசனை பற்றிய கேள்விக்கு, "அதிமுக அரசு மீது புழுதிவாரி தூற்றுவது மட்டுமே கமல்ஹாசனின் நோக்கமாக இருக்கிறது" என்று தடாலடியாக பதிலளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.