"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
திமுக இளைஞரணி பிரமுகர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட விவகாரம்; குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை.!

கடந்த 2020ல் நடந்த கொலை விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 34). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். கடந்த 2020ம் ஆண்டு செப்.13 அன்று, முத்துராமன் இரவு நேரத்தில் உறவினரை வள்ளியூரில் இறக்கிவிட்டு பின் மீண்டும் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: "திமுக கண்ணில் தோல்வி பயம்; இது பாமகவிற்கு கிடைத்த வெற்றி.." டாக்டர் ராமதாஸ் அறிக்கை.!!
திட்டமிட்டு கொலை
அச்சமயம், அங்குள்ள ரேஷன் கடை பகுதியில் சாலையில் மண்ணெண்ணெய் பேரல் இருந்த நிலையில், காரில் இருந்து இறங்கியவர் அதனை அப்புறப்படுத்த முற்பட்டார். அப்போது, இவரை கொலை செய்யும் திட்டத்துடன் இருந்த நபர்கள் முத்துராமனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.
காவல்துறையினர் விசாரணை
அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், முத்துராமனை மீட்டு நாகர்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக பணகுடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நீதிமன்றம் தீர்ப்பு
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த முத்துராமன், ராம்கி, குணா, தங்கவேல், தில்லை ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரம் தொடர்பான வழக்கு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை நிறைவுபெற்று இன்று இறுதி தீர்ப்பு வெளியானது. அதன்படி குற்றவாளிகள் ஐவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "எனக்கு பயந்து திமுக வெளியிட்ட மொட்டை கடுதாசி.." ஆளும் கட்சிக்கு இபிஎஸ் பதிலடி.!!