திமுகவுக்கு எதிராக குரல் கொடுத்த திமுக தொழிற்சங்கத்தை பாராட்டுகிறேன் - மனம்திறந்த முதல்வர்.!



MK Stalin Speech 12 hrs work law drop back

 

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தொழிலாளர்கள் வேலை நேரத்தை 12 மணிநேரமாகவும், விடுப்பு நாட்களை 3 ஆகவும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. 

இது தமிழக தொழிலாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன.

உழைப்பாளர் தினமான மே 1 இன்று உழைப்பாளர் பூங்கா நினைவு சின்னத்திற்கு வந்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க ஸ்டாலின், "12 மணிநேர வேலை மசோதா திரும்ப பெறப்படுகிறது. திமுக ஜனநாயக இயக்கம். 

திமுகவின் தொழிற்சங்கம் நமது திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்ததே அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. அதனை நான் மனதார பாராட்டுகிறேன்" என கூறினார்.