#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த உண்மையான தொண்டன்!!
மைசூரில் பிரதமர் மோடியின் ஆதரவாளர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் மோடியை புகைப்படத்துடன் அச்சடித்து விநியோகித்துள்ளார். மேலும் இவர் திருமண விழா மேடையிலேயே வாழ்த்த வந்தவர்களை 2019 தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரமும் செய்துள்ளார்.
இந்த திருமண நிகழ்விலும், தம்பதிகள் மணமேடையில் வாழ்த்து பெற நிற்கும் போது பிரதமர் மோடியின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடியே நின்றுள்ளனர்.
மேலும் தங்களை வாழ்த்த வருபவர்களிடமும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடிக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் திருமண மேடையிலேயே பிரச்சாரமும் செய்தார்.
இது குறித்து திருமணமான தம்பதி ஆனந்த்சாமி - மஞ்சுளா கூறும் போது தங்கள் திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அச்சிட்டதை பெறுமையாக நினைப்பதாகவும், மேலும் தங்களின் திருமண விழாவில் பிரதமர் மோடிக்காக பிரச்சாரம் செய்ய நீண்ட நாட்களாக விரும்பியதாகவும் தெரிவித்தனர்.