கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது வராத பிரதமர், ஓட்டு சேகரிக்க தமிழகம் வருகை!



narendira modi tamilnadu visit

கஜா புயல் பாதித்தபோது பிரதமர் தமிழகம் வந்து மக்களை சந்திக்கவில்லை என்று மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவரும் நிலையில் எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க ஜனவரி 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி பாஜக கட்சியை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தலுக்குள் மூன்று முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடிக்காக நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள், பேரணி என்று பாஜக தேசிய தலைமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு முதற்கட்ட சுற்றுப்பயணமாக வருகின்ற ஜனவரி 27ம் தேதி வருகை தர இருக்கிறார்.

narendra modi

தற்சமயம் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கஜா புயலினால் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் செய்வதறியாது இருக்கிறார்கள். புயல் பாதிப்புகளை பிரதமர் நேரில் வந்து பார்வையிடவில்லை என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில் வாக்கு சேகரிப்பதற்காக தமிழகம் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.