கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
நயன்தாரா விவகாரம்: நடிகர் ராதாரவி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.!
நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் நயன்தாரா பற்றி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"நயன்தாரா நல்ல நடிகை. இவ்ளோ நாள் தம் கற்றதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத (தப்பான) செய்தியெல்லாம் இல்லை. அதையும் தாண்டி நிக்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் விட்ருவாங்க. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, சீதாவாகவும் நடிக்கிறாங்க. என்று நயன்தாராவை தாக்கி இரட்டை அர்த்தமுடைய கருத்துக்கள் பலவற்றை தெரிவித்தார்.
இந்நிலையில், திரைபிரபல குடும்பத்திலிருந்து வந்தவர், அறிவில்லாமல் தனது சுய விளம்பரத்திற்காக இவ்வாறு தரக்குறைவாக பேசுவதை இங்கு யாரும் கண்டிக்க மாட்டார்கள். என்று நயன்தாராவுடன் தற்போது நெருக்கமாக இருந்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அதன் பிறகு நடிகையும் ராதாரவியின் தங்கையுமான ராதிகாவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.