பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ரகசியத்தை வெளியிட்டதாலே ஒபிஎஸ்யை சந்திக்க மறுத்ததாக ராணுவ அமைச்சர் சார்பாக விளக்கம்
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக, ஊடகங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் ரகசியத்தை வெளியிட்டதாலே சந்திக்க மறுத்ததாக விளக்கம்.
இதுகுறித்து, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் தரப்பினர் கூறியதாவது: ஒரு மாதத்திற்கு முன், தம்பியை அழைத்து வர, 'ஏர் ஆம்புலன்ஸ்' உதவியை பன்னீர் கோரினார். அதற்கு, உரிய கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் தான், அமைச்சரை சந்திக்க, முதலில் அனுமதி கோரினார். அவரது மொபைல் போனில், பன்னீர்செல்வமும் பேசினார். அப்போது, மைத்ரேயனுடன் துணை முதல்வரும் வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அமைச்சர், 'வரட்டும்' என சம்மதித்தார்.
இதையடுத்து, 'துணை முதல்வர் வருவது ரகசியமாக இருக்கட்டும். சந்திப்பின் போது, புகைப்படம் எடுக்க வேண்டாம். சந்திப்புக்குப் பின், படத்தை வேண்டுமானால் வெளியிடலாம்' என, மைத்ரேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கும், ராணுவ அமைச்சர் சம்மதித்தார்.எல்லாமே ரகசியமாக இருக்கட்டும் எனக்கூறி விட்டு, ராணுவ அமைச்சரை சந்திப்பதற்கு முன், அனைத்து விபரங்களையும், பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து விட்டார். அமைச்சரை சந்திக்காமலேயே, 'சந்தித்து நன்றி தெரிவித்தேன்' என்றார்.
எனவே, அவரை சந்திப்பதை, ராணுவ அமைச்சர் தவிர்த்து விட்டார். மைத்ரேயனை மட்டும் சந்தித்து பேசினார். அவரிடம், 'உங்கள் விவகாரங்களில், என் பெயரை, ஏன் தேவையில்லாமல் பயன்படுத்துகிறீர்கள்' என, அமைச்சர் கடிந்து கொண்டார். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தரப்பினர் கூறினர்.